புதினங்களின் சங்கமம்

யாழில் தங்கையின் கலியாணத்தை பல தடவை கல்லுக் குத்தி நிறுத்திய அக்கா!! எதற்காக? தங்கை தற்கொலை முயற்சி!!

யாழ் நாவலர்வீதியில் வசிக்கும் 28 வயதான யுவதி ஒருவர் தற்கொலை முயற்சியிலிரு்நது காப்பாற்றப்பட்டுள்ளார். பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் பிரதம அதிகாரியாக இருக்கும் ஒருவரது இரண்டாவது மகளே இவ்வாறு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவராவர்.

அதிகாரியின் மூத்தமகள் திருமணம் முடித்துவிட்டார். மூத்தமகளும் விவசாயத்துறை பட்டதாரி. இஞ்சினியர் ஒருவரை திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ளன.

விஞ்ஞானதுறைப்பட்டதாரியான இரண்டாவது மகளுக்கு திருமணங்கள் பேசி நிச்சயதார்த்தம் வரை வந்து பலதடவைகள் குழம்பிபோயிருந்தது. இதற்கான காரணம் எவையும் பெற்றோருக்கு புரியாது இருந்தது.

சில நாட்களுக்கு முன்னரும் அரசஉத்தியோகத்தர் ஒருவரை பேசி நிச்சயித்திருந்த நிலையில், அவர்களும் திருமணம் வேண்டாம் என கூறியதால் அதிகாரி குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எதற்காக திருமணம் நிறுத்தப்பட்டது என மாப்பிளை வீட்டாரிடம் கலியாணத்தரகர் மூலம் அறிய முற்பட்டுள்ளனர். அதன் போதே இரண்டாவது மகளுக்கு காதல் தொடர்பு இருப்பதாகவும், அது தொடர்பான தகவல் தமக்கு தொலைபேசி மூலமாக கூறப்பட்டதுடன், வட்சப் இலக்கத்திற்கு அதிகாரியின் 2வது மகளுக்கு ஆண் ஒருவர் கேக் ஊட்டிவிடும் புகைப்படமும் அனுப்பபட்டதாக மாப்பிளை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரி இது தொடர்பாக தனது இரண்டாவது மகளிடம் கேட்டு சண்டை பிடித்துள்ளார். அதே நேரம், இரண்டாவது மகளின் கோரிக்கைக்கு ஏற்ப, மாப்பிளை வீட்டாருக்கு மகளின் காதல் தொடர்பு பற்றி தொலைபேசியில் தெரிவித்தவர்கள் யார்?, என்பது தொடர்பாக மாப்பிளை வீட்டாரிடம் கேட்ட போது அந்த தொலைபேசி இலக்கம் மாப்பிளை வீட்டாரால் அதிகாரிக்கு கொடுக்கப்பட்டது. அந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்திய போது அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டிந்தது. இதனையடுத்து அதிகாரியான தந்தை தனது நெருங்கிய பொலிஸ் அதிகாரியூடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தார். அதன் பின்னர் அந்த இலக்கம் தொடர்பான தகவல் பெறப்பட்ட போது அதிகாரி கடும் அதிர்ச்சி அடைந்தார். அந்த தொலைபேசி இலக்கத்திற்கு சொந்தக்காரர் தனது மூத்தமகளின் கணவரான இஞ்சினியர் மருமகன் என தெரியவந்துள்ளது. இதன் பின்னர் பொலிசாரிடம் இருந்த முறைப்பாட்டை வாபஸ் பெற்றுவிட்டு வீட்டில் வந்து விசாரணை தொடங்கிய போது, அந்த தொலைபேசி இலக்கத்தை மூத்தமகளே பயன்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இணைய பாவணைக்காகவே குறித்த தொலைபேசி சிம் வாங்கப்பட்டுள்ளதாக மூத்த மருமகன் கூறியிருந்தார். அத்துடன் மாப்பிளை வீட்டாரிடம் தகவல் கொடுத்தது பெண் ஒருவர் என அவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தனது மூத்தமகளை அதிகாரி விசாரணைக்கு உட்படுத்திய போது மூத்தமகள் அதற்கு ஒத்துழைக்காது கத்திக் குழறி கூப்பாடு போட்டதாக தெரியவருகின்றது.

மாப்பிளை வீட்டாரிடமிருந்து கலியாணத்தரகர் மூலம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட புகைப்படமும் பெறப்பட்டது. மாப்பிளை வீட்டாருக்கு கேக் ஊட்டிய புகைப்படம் அனுப்பியவரும் மூத்த மகளே என அந்த புகைப்படத்தை பார்வையிட்ட அதிகாரி குடும்பத்தினர் தெளிிவாக அறிந்து கொண்டனர். ஏனெனில் அந்தப் புகைப்படம் 2017ம் ஆண்டளவில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒன்றுவிட்ட அண்ணன் ஒருவரால் இரண்டாவது மகளுக்கு அவளது பிறந்ததினத்தன்று கிறீம்கவுஸ் ஒன்றில் வைத்து கேக் ஊட்டி எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

இதன் பின்னர் தனது அக்காவே தனக்கு வில்லியாக இருந்த விடயம் அறிந்த தங்கை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.

தங்கையின் திருமணத்தை அக்கா குழப்புவதற்கு காரணம் சீதனப்பங்கீடு என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிக்கு நாவலர் வீதியில் உள்ள வீட்டுடனான காணி பல கோடிரூபா பெறுமதியானது என்றும் அதில் ஒரு பகுதி காணியும் வீடுமே மூத்த சகோதரிக்குச் சீதனமாக கொடுக்கபட்டிருந்துள்ளது.

இன்னொரு காணியும் மற்றுமொரு வீட்டுடனான காணியும் வலிகாமம் பகுதியில் அதிகாரிக்கு உள்ளது. தங்கைக்கு திருமணம் பேசும் போது அக்கா,நாவலர் வீதியில் உள்ள காணியை சீதனமாக கொடுக்காது வலிகாமம் பகுதியில் உள்ள சொத்தை சீதனமாக கொடுக்கும்படி வலியுறுத்தி வந்ததாக கலியாணத்தரகர் குறிப்பிட்டுள்ளார். அத்தடன் தனது வீட்டுடன் சேர்ந்திருந்த காணியை இறுதிக்காலத்தில் யார் பெற்றோரைப் பார்க்கின்றார்களோ அவர்களுக்கு கொடுக்குமாறும் அக்கா ஆலோசனை கூறியிருந்தாராம். ஆனால் கலியாணத்தரகர் குறித்த காணியை மாப்பிளை வீட்டாருக்கு கொடுப்பதற்கு கட்டாயப்படுத்தி அதற்கு அதிகாரியிடம் சம்மதமும் பெற்றிருந்த நிலையிலேயே கலியாணம் குழம்பியதாக கலியாணத்தரகர் தனது நண்பர்களுக்கு கூறி விசனப்பட்டுள்ளார்.