யாழ்ப்பாணத்தில் பணிபுரியும் பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு ஏற்பட்ட கதி!!
மாத்தளை, ரத்தோட்டை, பண்டாரபொல சேருகொல்லவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனின் வயது 16.
மாத்தளை புனித தோமஸ் வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாத்தளை கௌடுபலெல்ல கல்வடுகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த தினுர லக்ஷித பண்டாரநாயக்க என்ற பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார். அவர் இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பாடசாலை மாணவனின் மற்றுமொரு நண்பரும் நீராடச் சென்றுள்ளதாகவும், இருவரும் குளிப்பதற்கு முன்னர் பியர் குடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த மாணவனின் தந்தை காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஆவார்.

