புதினங்களின் சங்கமம்

யாழில் விஜயகாந் பாணியில் சிந்தித்து பாக்கிஸ்தான் இளைஞர்களை துரத்திப் பிடித்த இளைஞர்கள்!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் வைத்து பாகிஸ்தான் பிரஜையொருவர் பொதுமக்களால் சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டனர். பின்னர், பொலிசார் அவர்களை விசாரணை செயது விட்டு விடுதலை செய்தனர்.

கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்தது.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியிலுள்ள கடையொன்றில் இருவர் பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர். அதற்காக அவர்கள் 5,000 ரூபா தாளை கொடுத்துள்ளனர். உடனே, பணத்தை தருமாறும், பொருட்களை மீள ஒப்படைப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதனால், அவர்கள் கள்ளநோட்டு கும்பலாக இருப்பார்களோ என கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவர்களிடம் விசாரணை நடத்த முற்பட, அங்கு ஆட்கள் குவிய, இருவரில் ஒருவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். மற்றையவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பாகிஸ்தான் நாட்டவர் என்பது தெரிய வந்தது. தமிழ் சினிமாவில் பாகிஸ்தானிலிருந்து வந்தாலே தீவிரவாதிதான் என பார்த்துப் பழகிய அங்கிருந்தவர்கள், அந்த நபர் ஒரு தீவிரவாதியாக இருப்பாரோ என்ற அளவிலும் தமது புலனாய்வு புத்தியால் யோசனை செய்து, அங்கு பேசிக் கொண்டனர்.

பொலிசார் வந்து அந்த இளைஞனை பொறுப்பேற்று விசாரணை நடத்தியதில், பாகிஸ்தானை சேர்ந்த இருவரும் வர்த்தக நோக்கத்துடன் வந்திருந்ததும், புதிய இடத்தில் பதற்றத்தில் மற்றைய இளைஞன் அங்கிருந்து தப்பியோடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை பொலிசார் விடுதலை செய்தனர்.