புதினங்களின் சங்கமம்

A9 வீதியில் மற்றொரு பயங்கரம்… நேருக்கு நேர் மோதிய 2 டிப்பர்கள்!!

மாங்குளத்துக்கு அண்மையாக ஏ9 வீதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஆணும், பெண்ணும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாங்குளத்துக்கும், கனகராயன் குளத்துக்கும் இடையில் இந்த விபத்து நடந்தது.
மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுவதை தவிர்ப்பதற்கு டிப்பர் ஒன்று முயன்ற போது, எதிரே வந்த டிப்பருடன் மோதியது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
May be an image of 2 people and roadNo photo description available.May be an image of jeep and snowplough