யாழில் ஹேரோயின் போதைப்பொருள் பாவித்த மற்றுமொரு வெங்காயம் பலி!!
யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசிமூலம் செலுத்திய ஒருவன் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பகுதியை ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த சிவசேதநாதன் கோபிநாதன் (27) என்பவனே உயிரிழந்துள்ளான். இவன் அதிகளவான போதைக்கு அடிமையானவன்.
கலட்டி பகுதியில் நேற்று (23) உயிரிழந்த நிலையில் இவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொருவருடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த நிலையில், ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் தனது உடலில் செலுத்தியுள்ளான்.
அளவுக்கதிமான ஹெரோயின் செலுத்தப்பட்டதால் அந்த இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவனது தலையில் சிறு காயங்கள் காணப்பட்டதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பிரதேசவாசிகளால் எழுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில், உயிரிழந்தவரின் சடலம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதில் அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் செலுத்தியதால் மரணம் நிகழ்ந்தது உறுதியாகியுள்ளது.
உயிரிழந்தவனின் உடலில் ஊசி செலுத்திய அடையாளங்கள் காணப்பட்டன.
போதை ஊசி செலுத்திய பின் அவர் நிலத்தில் விழுந்த போது, தலையில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.
https://www.youtube.com/@TamilReporter001

