புதினங்களின் சங்கமம்

யாழ். ஊர்காவற்துறையில் சற்று முன் இரண்டு பேருந்துகள் விபத்து! பலர் படுகாயம்!! வீடியோ

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை – குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் அல்லைப்பிட்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலரும் படு காயமடைந்துள்ளதாகவும் அம்புலன்ஸ் வண்டிகள் அப்பகுதிக்கு செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 8 பயணிகள் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.