கொழும்பில் அடுக்குமாடி சுத்தம் செய்பவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!
பொரளை, செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் கழிவறைக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு வகையான துப்பாக்கிகளின் 15 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.T56 துப்பாக்கிகள் மற்றும் M16 துப்பாக்கிகளின் தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர், கொழும்பு மாநகர சபை ஊழியர்களுடன் சேர்ந்து, அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தமான கழிவறை அமைப்பை சுத்தம் செய்யும் போதே இந்த தோட்டாக்களை அவதானித்துள்ளனர்.பின்னா் இது தொடர்பில் பொரளை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த தோட்டாக்கள் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இவற்றை சில காலங்களுக்கு முன்னர் யாரேனும் புதைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

