யாழில் ஹேரோயின் கடத்தி சிறைக்குச் சென்ற வெங்காயம் சிறையிலிருந்து திரும்பி வந்து வைத்த ஹேரோயின் பார்ட்டியால் பலி!!
சாவகச்சேரி பிரதேசத்தில் அளவுக்கு அதிகமாக ஹெரோயின் உட்கொண்டதால் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.நுணாவிலை சேர்ந்த 29 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்தான்.இந்த இளைஞன் போதைக்கு அடிமையானவன். போதைப்பொருள் தொடர்பான குற்றமொன்றிற்காக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவன், நேற்று முன்தினம் (19) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளான்.அவரது மனைவியே பிணைக் கையெழுத்திட்டுள்ளார்.நேற்று நண்பர்களுடன் ஹெரோயின் போதைப்பொருள் உட்கொண்ட போது, அளவுக்கதிகமாக போதைப்பெருளை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளான்.உயிரிழந்த இளைஞனின் சடலம் நேற்று இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்ட போது, அவனது வெங்காய நண்பர்கள் அங்கு குவிந்து, சடலத்தை உடனடியாக ஒப்படைக்குமாறு குறிப்பிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டனர். பின்னர், பொலிசார் அவர்களை விரட்டியடித்தனர்.

