புதினங்களின் சங்கமம்

கில்மிசாவை தலையில் துாக்கி புகழ்ந்து கொண்டாட வேண்டுமா?? யாழ் வைத்தியர் அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷா, தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஷீ தமிழ் நடத்திய சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றி நிகழ்ச்சியின் வெற்றியாளராக வெற்றி வாகை சூடியுள்ளார். இந்நிலையில், இலங்கைகு திரும்பிய கில்மிஷாவிற்கு யாழ் மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டதோடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை நேரில் சென்றும் தொலைபேசி ஊடாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கில்மிஷாவின் கொண்டாட்டங்களுக்கு பின்னால் பேரினவாதிகளின் தந்திரங்கள் இருப்பதாக சமுதாய மருத்துவ நிபுணர் Dr. முரளி வல்லிபுரநாதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தனது திறமையால் தமிழ்நாட்டில் வெற்றியீட்டிய கில்மிஷாவின் திறமை பாராட்டபட வேண்டியது என்பதோடு அதற்கு பின்னதாக ஜனாதிபதி பாராட்டு கடிதம் அணுயுள்ளமையும், அவரை தேரில் ஏற்றி மிகையான கொண்டாட்டம் நடத்தியமை தொடர்பிலும் தமிழ் பேசும் மக்கள் ஆராய்ந்து விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழர் வாழும் பிரதேசங்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பாக மட்டுமன்றி கலைத்துறை, கிரிக்கெட், உள்ளக வெளியக விளையாட்டுகளில் இதற்கு முன்னர் எந்தவொரு தென் பகுதி தலைவர்களும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. தற்போது வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி நூலகம் எரிக்கப்பட்ட போது அதை மீள கட்டியெழுப்ப எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத அவர், தற்போது கில்மிஷாவிற்கு பகிரங்க கடிதம் அனுப்புவது அடுத்த தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கான தந்திரம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பேரினவாதிகள் தொடர்ச்சியாக தமிழர்களின் முள்ளந்தண்டாக கருதப்பட்ட கல்வியை இலக்கு வைத்தே தமது திட்டமிட்ட தாக்குதலை நடத்தி வந்திருக்கிறார்கள். அதே வேளையில் தமிழ் மாணவர்கள் கல்விக்கு அப்பாற்பட்ட ஏனைய துறைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்துவதை இனவாதிகள் தடுத்து வந்திருக்கிறார்கள். உதாரணமாக வடக்கு கிழக்கில் இருக்கும் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஒருவரும் இதுவரை தேசிய மட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் தமிழ் இளைஞர் சமூகத்தை சீரழிப்பதற்கு ஆயுதப்படையினர் போதை வஸ்து விநியோகிப்பது தெளிவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கும் தொலைக்காட்சிக்கும் அடிமையான பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்கள் போல ஈழத்தமிழ் மக்கள் செயல்பட்டால் அது சூழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கும் ஈழத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் பேரினவாதம் தமிழர்களின் கல்வியை ஒடுக்குவதற்கு கடந்த காலங்களில் ஊடகங்களையும் விட்டுவைக்கவில்லை. தேசிய தொலைக்காட்சி பல தசாப்தங்களாக சிங்களத்தில் மாணவர்களுக்கு உதவும் கல்வி நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி வந்த அதே நேரம் தமிழில் சினிமா பாடல்களையும் குத்தாட்டங்களையும் ஒளிபரப்பி வந்தார்கள். இவ்வாறான பேரினவாத சூழ்ச்சிகளின் மத்தியில் வாழும் தமிழ் மாணவர்களும் பெற்றோர்களும் கல்வி சமூகமும் இந்த சூழ்ச்சிகளை உணர்ந்து அதற்கு பலியாகாமல் கல்விக்கு முதலிடத்தையும் அதே வேளையில் கல்விக்கு ஊறு விளைவிக்காத வண்ணம் மாணவர்களின் ஏனைய திறமைகளை ஊக்குவிக்கும் மாற்று திட்டங்களுடன் நமது சமூகத்தை கட்டியெழுப்ப முன்வரவேண்டும் எனவும் சமுதாய மருத்துவ நிபுணர் Dr. முரளி வல்லிபுரநாதன் வலியுறுத்தியுள்ளார்.

May be an image of ‎2 people and ‎text that says "‎Murali Vallipuranathan 15h. கில்மிஷாவின் கொண்டாட்டங்களும் பேரினவாதிகளின் தந்திரங்களும் தனது பாட்டு திறமையால் தமிழ்நாட்டில் வெற்றியீட்டிய கில்மிஷாவின் திறமை நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியது. ஆனால் அதற்கு ஜனாதிபதி பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளதும் அதன்பின் தேரில் ஏற்றி மிகையான கொண்டாட்டம் நடத்துவது தொடர்பாக தமிழ் பேசும் மக்கள் ஆராய வேண்டியதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதும் மிகவும் அவசியம். முதலில் ஜனாதிபதி ரணில் கடிதம் அனுப்பியதன் நோக்கத்தை ஆராய்வோம். வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழர் வாழும் பகுத... See more ශී බංකා சனத்படு සකාධිපති Presden هmka Deanbr10 u F k‎"‎‎