தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் தனது மனைவியுடன் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக தகவல்!!
தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகரான இளையதளபதி விஜய் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளையதளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
அதோடு லியோ திரைப்படம் வெளியாகி முதல் நாளே உலகளவில் ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்தது. தொடர்ந்து நடிகர் , விஜய் ‘தளபதி 68 ‘ படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்துள்ளார்.
இலங்கையில் ‘தளபதி 68 ‘ படப்பிடிப்பு
‘தளபதி 68’ இன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘தளபதி 68 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த படப்பிடிப்பு ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் ‘தளபதி 68’ படக்குழுவினர் விரைவில் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை இளயதளபதி விஜய் மனைவி சங்கீதா யாழ்ப்பாணம் இருபாலையைச் சேர்ந்த லண்டன் வாழ் புலம்பெயர் தமிழிச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

