Home புதினங்களின் சங்கமம் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் ஜங்கியுடன் சென்றது யார்? செக்குறிட்டிக்காட்டின் கொலை வெறி!! Video

யாழ் பல்கலைக்கழகத்திற்குள் ஜங்கியுடன் சென்றது யார்? செக்குறிட்டிக்காட்டின் கொலை வெறி!! Video

யாழ் பல்கலைக்கழக நுளை வாயிலில் அரைக்காற்சட்டை போட்டபடி உள்ளே நுழைந்த ஒருவர் அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவருடன் சென்ற பெண்கள் உட்பட்டவர்கள் காவலாளிகளுடன் வாதாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த காவலாளிகள் அங்கு சென்றவர்களுடன் முரண்பட்ட விதம் மிகவும் கேவலத்துக்குரியது என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

யாழ் பல்கலைக்கழகம் மட்டுமல்ல இலங்கையில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களிற்குள்ளும் கலாச்சார உடையுடன் செல்வது என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. ஆனால் அண்மையில் தாடியுடன் பரீட்சை எழுதச் சென்ற முஸ்லீம் மாணவனை பரீட்சை எழுத அனுமதிக்க முடியாது என்று தென்னிலங்கை பல்கலைக்கழகம் அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து மாணவன் நீதிமன்றில் வழக்கு தொடுத்து தனக்கு சார்பான தீர்ப்பை பெற்றுக் கொண்டான்.