இன்று சூரிய கிரகணம்! தவறுதலாக கூட இவற்றை செய்து விட்டாதீர்கள்…
ஜூலை 2 ஆம் திகதியான இன்று, தென் பசிபிக் பிராந்தியத்தில் மொத்த சூரிய கிரகணம் நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ உள்ள சூரிய கிரகணம் மனித உடலில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் நம்பப்படுகிறது.
இந்த நிகழ்வு சில்லி, அர்ஜென்டினா மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் அருகிலுள்ள பகுதிகளில் தெளிவாகக் காணமுடியும். ஏனைய நாடுகளில் பார்க்கக் கிடைக்காது என்றாலும் இந்த சூரிய கிரகணத்தின் தாக்கம் அனைத்து இடங்களிலும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த சூரிய கிரகணம் அமெரிக்க நேரத்தின்படி 12.55 மதியம் நிகழும். நமது நாட்டின் நேரத்தின்படி இன்று இரவு வேளையில் நிகழும் என்பதனால் இந்த நேரத்தில் இந்த சூரிய கிரகணத்தை எம்மால் பார்க்க இயலாது.
இருப்பினும் இணையத்தளங்களினூடாக இதை காணலாம்.
இந்த முழு சூரிய கிரகணம், நான்கு நிமிடங்கள் 33 வினாடிகள் வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணத்தின் போது மக்கள் செய்ய கூடாத செயல்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைக்கு ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக வீட்டுக்குள் இருக்க வலியுறுத்தப்படுகிறார்கள்.
கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்படும் எந்த உணவையும் உண்பது சில உபாதைகளை உருவாகும் என்று கூறப்படுகிறித்து.
அப்புறப்படுத்த முடியாத உணவைத் துளசி இலைகளைப் பயன்படுத்தி பாதுகாத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய பகவான் மற்றும் இறைவனைத் மனதில் வழிபடுதல் போன்ற செயல்களை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
எந்தவொரு புனிதமான செயல்களைச் செய்யக் கூடாது.
கிரகணத்தின் போது குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது.
நேரடியாகச் சூரிய கிரகணத்தைப் பார்வையிடக் கூடாது.