புதினங்களின் சங்கமம்

யாழில் கொடூரம்!! பாலியல் ஆசைக்கு மறுத்த 49 வயது பெண்ணை தீயில் எரித்த 36 வயது குடிகாரன்!!

வீட்டுக்குள் தனித்திருந்த பெண்ணை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்த முயற்சித்த நபர், அவர்
இணங்க மறுத்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளார். பெண் கூச்சலிட்டதால் குறித்த
நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் நடந்துள்ளது.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 49 வயது குடும்பப் பெண்ணை, 36 வயதுடைய நபர் பாலியல்
துர்நடத்தைக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

மதுபோதையில் இருந்த நபரைத் தள்ளி வீழ்த்தி விட்டு பெண் அபயக்குரல் எழுப்பினார். அயலவர்கள்
ஓடி வரவே ஆத்திரமடைந்த நபர் அங்கிருந்த மண்ணெண்ணையை பெண் மீது ஊற்றி தீயிட முயற்சித்துள்ளார்.

எனினும் அயலவர்க்ள் காப்பாற்றப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.