புதினங்களின் சங்கமம்

யாழில் வீட்டு பாத்ரூமில் குளித்த யுவதியை வீடியோ எடுத்த ஆணழகு மன்மதனை பொலிசார் பிடித்தது எப்படி? வீடியோ

யாழ்ப்பாணத்தில் யுவதிகள் குளிக்கும் போது இரகசியமாக படம் பிடித்த மன்மதராசாவை யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நூதனமக வலைவிரித்து பிடித்துள்ளனர்.

கைதான மன்மதராசா, மொடல் அழகனாக பணிபுரிபவர்.

கடந்த வாரமளவில், யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றிற்குள் இரகசியமாக நுழைந்த இளைஞன், குளியலறைக்குள் யுவதியொருவர் குளித்துக் கொண்டிருந்த போது, கையடக்க தொலைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

குளியலறை துவாரமொன்றின் ஊடாக கையடக்க தொலைபேசி ஒன்று தென்பட்டதையடுத்து யுவதி கத்தி கூச்சலிட்டுள்ளார். அந்த இளைஞன் தப்பியோடி விட்டார்.

இது தொடர்பில் பொலிசாரிடம் முறையிடப்பட்டிருந்தது.

பின்னர் மீண்டும் ஒருமுறை அந்த வீட்டுக்குள் இளைஞன் இரகசியமாக நுழைந்துள்ளார். யுவதி மீளவும் அந்த இளைஞனை கண்டு சத்தமிட, தப்பியோடி விட்டார்.

யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டனர். இதன் போது, கொக்குவில், பூநாரிமடத்தடியை சேர்ந்த இளைஞன் ஒருவரே, தொடர்புடைய மன்மதராசா என்பதை கண்டறிந்தனர்.

குறிப்பிட்ட இளைஞன், யாழ்ப்பாணத்திலுள்ள சில ஆடை விற்பனை நிலையங்களின் விளம்பரங்களில் ஆண் மொடலாக நடித்துள்ளார். ஆயினும், அவர் தற்போது தங்கியுள்ள இடத்தை யாரும் அறிந்திருக்கவில்லை.

இதையடுத்து, பொலிசார் நூதனமாக வலைவிரித்துள்ளனர்.

பிறிதெரு தொலைபேசி இலக்கத்தின் வழியாக இளைஞனை தொடர்பு கொண்டு, யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆடையகம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க வேண்டுமென கேட்டுள்ளனர். முன்னணி நடிகையொருவரும் அதில் நடிப்பார் எனவும், அவருடன் இணைந்து நடிக்க வேண்டுமென குறிப்பிட்டனர். இளைஞனும் அதற்கு சம்மதித்தார்.

இந்த உரையாடலின் போது, மருதனார்மடத்திலுள்ள உணவகம் ஒன்றில் தற்போது பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இளைஞனின் ஆடை அளவை பெறுவதற்காக சந்திக்க வேண்டுமென பொலிசார் தெரிவிக்க, தானே நேரில் வருவதாக இளைஞன் தெரிவித்துள்ளார். இதன்படி, சுன்னாகத்திலுள்ள குறிப்பிட்ட இடமொன்றுக்கு வருமாறு பொலிசார் தெரிவித்தனர்.

இளைஞன் ஆர்வம் மிகுதியில் சுன்னாகத்துக்கு சென்ற போது, அங்கு சிவில் உடையில் மறைந்திருந்த பொலிசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

அவரது கையடக்க தொலைபேசியை பொலிசார் சோதனையிட்ட போது, சமூக வலைத்தளங்கள் வழியாக பல யுவதிகளுடன் அவர் தொடர்பிலிருந்தது தெரிய வந்தது.

குறிப்பிட்ட இளைஞனுக்கு எதிராக யுவதி முறைப்பாடும் பதிவு செய்துள்ளார்.

இளைஞனை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதுடன், அவரது கையடக்க தொலைபேசியை பரிசோதனைக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, குறிப்பிட்ட யுவதியை தான் காதலிப்பதாக இளைஞன் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பொலிசாரின் விசாரணையில் அது தவறான தகவல் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றத்தின் பாரதூரதன்மையிலிருந்து தப்பிக்க இளைஞன் அப்படியொரு கதையை சோடிக்க முற்படுகிறாரா என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

கைதான மன்மதராசாவை அதற்கு முன்னர் கண்டிருக்கவேயில்லையென பாதிக்கப்பட்ட யுவதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேவைப்படின் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உண்மையை வெளிப்படுத்தவும் தயாராக இருப்பதாக பொலிசாரிடம் தெரிவித்தார்.

பல்வேறு விதமாக இளம் பெண்கள் பாதிக்கப்பட்ட போதும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி நீதிக்காக போராட தயாராக இருப்பதில்லை. எனினும், அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதியின் முன்மாதிரியான துணிச்சலை பொலிசாரும் பாராட்டினர்.