புதினங்களின் சங்கமம்

கொழும்பில் சொகுசுபஸ்சில் யாழ் யுவதிக்கு நடக்கும் கேவலம்!! வீடியோ

சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்ர்களை இலக்கு வைத்து திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர். அந்த வைகையில் கடந்த 02ம திகதி இரவு பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பேரூந்தில் ஒரு குடும்பம் முற்பதிவு மேற்கொண்டு கொழும்புக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தது

பேரூந்து புத்தளம் பகுதியை வந்தடைந்த பொழுது 4 பெண்கள் 2 ஆண்களுமாக 6 பேர் பேரூந்தில் பயணிகள் போர்வையில் ஏறியிருந்தனர்

இதேவேளை கோண்டாவில் பகுதியிலிருந்து ஏறிக்கொண்ட ஒரு குடும்பத்தின் 1 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மேற்கூறிய ஆறு பேர்கொண்ட குழுவினால் கொழும்பு ஆமர் வீதி பகுதியில் பேரூந்தில் வைத்து களவாடப்பட்டிருந்தது

மேற்கூறிய பணத்தினை களவாடியவர்கள் ஐந்துலாம்பு சந்தியில் இறங்கிக்கொண்டதாக பேரூந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தெரிவித்திருந்தனர்.

பணத்தினை இழந்த குறித்த குடும்பத்தினர் கொழும்பு ஆமர் வீதி பகுதியில் இறங்க முற்படும்போதே குறித்த கும்பலில் பெண் ஒருவர் பேரூந்தில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய காமராவினை தனது கைப்பையினால் மறைக்கும் போது மற்றைய பெண் கோண்டாவில் பகுதியிலிருந்து ஏறிய பெண்ணின் கைப்பையினுள் பணத்தினை திருடும் காட்சிகள் இரகசிய கண்காணிப்பு கமராவினுள் பதிவாகியுள்ளது.

இதேவேளை குறித்த யாழ் குடும்பத்தினருக்கு பேரூந்து நடத்துனர் பணம் களவாடப்படும் முன்பே எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருந்ததாக பணத்தினை இழந்த குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

பணத்தினை களவாடியவர்கள் முற்பதிவு செய்தே குறித்த பேருந்தில் பயனித்திருந்ததாகவும் , அவர்கள் முற்பதிவு செய்ய அழைத்த தொலைபேசி இலக்கத்தையும் பணத்தை இழந்தவர்களிடம் பேரூந்து நடத்துனர்களினால் வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ரகசிய கண்காணிப்பு கமரா மூலம் பெறப்பட்ட காணொளிகள் மற்றும் கிடைக்கப்பெற்ற தொலைபேசி எண் என்பனவற்றை வைத்து கொழும்பு கொட்டகேனா போலீஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x