புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் கொலை செய்துவிட்டு இந்தியாவுக்கு ஓடித் தப்பிய ஜெயராசா பிடிபட்டது எப்படி?

யாழ்ப்பாணத்தில் கொலை சம்பவம் ஒன்றின் பிரதான சந்தேகநபர் ஒருவர் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த சந்தேக நபர் யாழிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (11) சனிக்கிழமை காலை கரையிறங்கியுள்ளார்.இது தொடர்பில் தகவல் கிடைத்த கடற்படை பொலிஸார் அவரை அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.யாழ் அரியாலை, சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு படகு மூலம் தப்பித்து தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.குறித்த நபரின் புகைப்படத்தின் அடிப்படையில், அவர் மீது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் கொலை வழக்கு ஒன்றுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபர் என யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டு பொலிசாரின் தகவல் இது….

இலங்கையின் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் அகதிகள் போர்வையில் தமிழகத்தில் பதுங்கி இருப்பதற்காக படகு மூலம் தனுஷ்கோடி வந்திறங்கியவர் கைது செய்த மரைன் போலீசார் அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இன்று காலை தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரைப் பகுதியில் அந்நிய நபர்களின் நடமாட்டம் மற்றும் கடத்தல் தடுப்பு தொடர்பாக ரோந்து பணியில் ராமேஸ்வரம் மரைன் போலீசார் ஈடுப்பட்டு வந்தனர்.

அப்போது தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் மரைன் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்ற இலங்கை நபர் ஒருவரை மடக்கிப்பிடித்து விசாரணை செய்ய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த மரைன் போலீசார் மண்டபம் மலைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது அவர் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவல்துறையை சேர்ந்த ஜெயராசா என தெரிய வந்தது.

இதனையடுத்து அவரிடம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் மரைன் போலீசார் ஜெயராசாவிடம் விசாரணை நடத்திய போது இவர் மீது இலங்கை சாவகச்சேரி மற்றும் ஊர்க்காவல்துறை காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் பல குற்ற பிண்ணனி வழக்குகள் இருப்பதால் இவரை இலங்கை போலீசார் கைது செய்து சிறை தண்டனை பெற்று சிறையில் அடைத்து விடுவார்கள் என்பதால் இலங்கையிலிருந்து தப்பித்து இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்து படகு ஒன்றில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் இலங்கை மன்னர் மாவட்டம் பேசாலை கடற்கரையிலிருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடி வந்துள்ளதாக விசாரணையில் ஜெயராசா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகுமூலம் கடல் வழியாக இந்திய கடல் எல்லைக்குள் வந்தது தெரிய வந்ததால் அவர் மீது மண்டபம் மரைன் காவல் நிலைய போலீசார் கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின் அவரை சென்னை புழல் சிறையில் அடைப்பதற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இலங்கையின் குற்ற பிண்ணனி உள்ள நபர் ஒருவர் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவி அகதிகள் போர்வையில் தமிழக அகதிகள் முகாமில் பதுங்கி இருப்பதறலகாக தனுஷ்கோடி வந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x