புதினங்களின் சங்கமம்

தெமட்டகொட பகுதியில் குண்டுத் தாக்குதல்!!

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான தெமட்டகொட ருவானின் தெமட்டகொட வெலுவான பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.வீட்டின் முன் வாயிலில் இரண்டு குண்டுகளும் தோட்டத்தில் ஒரு வெடிகுண்டும் வீசப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.தெமட்டகொட ருவன் புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது,