தரம் கெட்டு போகும் வவுனியா உணவகங்கள், சந்ததிக்கே பாவத்தை சேர்க்க போகிறீர்களா?
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
வவுனியாவில் பல உணவகங்கள் இருந்த போதிலும் ஒரு உணவகத்தில் நம்பி உணவை வாங்க முடியாத நிலை இருப்பது வேதனையளிக்கின்றது.
ஒரு நாளைக்கு ஒரு சுவை ஒரு நாளைக்கு ஒரு அளவு என தினமும் உணவின் அளவும் உணவின் தரமும் வேறுபடுகிறது.
பொருளாதார நெருக்கடியின் போது மூன்று மடங்காக உயர்ந்த உணவுகள் இன்று இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் நாட்டில் பொருட்கள் சேவைகள் ஓரளவிற்கு வழமைக்கு திரும்பியுள்ள நிவையிலும் மூன்று மடங்குகளாக உயர்த்தப்பட்ட உணவுகளில் விலை ஒரு ரூபா கூட குறைந்த பாடில்லை .
போதாக் குறைக்கு படு பாதகர்கள் உணவின் அளவை குறைத்து அரை வயிற்று உணவை வழங்கும் புதிய நுட்பத்தை கண்டு பிடித்துள்ளனர்.
இன்று முதலில் ஒரு உணவகத்தில் ஒரு உணவு வகையை வாங்கி அது தரம் இல்லாமல் இருந்ததால் வவுனியாவில் ஓரளவிற்கு சரியான அளவில் ஒரே தரத்தில் உணவை வழங்கக்கூடிய உணவகமான Vanni in உணவகத்தில் 850 ரூபாவிற்கு chicken fried rice ஒன்று வாங்கி வந்து திறந்து பார்த்தால் ஒரு குழந்தை கூட நிறைவாக உண்ண முடியாத அளவிற்கு அளவு மிகவும் குறைவாக இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. இது பெரும் ஏம்ற்றத்தை தந்தது.
வவுனியா உணவக உரிமையாளர்களே! ஒருவர் உண்ணும் உணவில் அநியாயம் செய்து உங்கள் பரம்பரைக்கே பாவத்தை தேடிக் கொள்ளாதீர்கள். இலங்கையிலேயே அதிகவிலைக்கு குறைவான அளவில் உணவை வழங்கும் உணவகங்கள் வவுனியாவில் தான் உள்ளது. இதை தட்டிக்கேட்க யாரும் இல்லை என்பதால் அவர்கள் விருப்பத்திற்கு செயற்படுகின்றனர்.
குறிப்பு :- கடந்த வாரம் நான் மட்டக்களப்பு சென்ற போது அங்குள்ள உணவகங்களில் மிகவும் தரமான உணவுகள் அதிக அளவில் குறைந்த விலையில் உணவுகளை பெற முடிந்தது அப்போது எமது வவுனியாவில் உணவகங்கள் பகல் கொள்ளை அடிப்பது தெளிவாக புரிந்தது.

