புதினங்களின் சங்கமம்

பாலாவியில் வீட்டுக்குள் புகுந்து திருடன் நடாத்திய திருவிளையாடல்!! சேலை உடுத்து பிடிபட்டது எப்படி?

பாலாவி – முல்லை ஸ்கீம் கிராமத்தில் யாருமே இல்லாத வீடொன்றில் திருட வந்த திருடன் அந்த வீட்டில் படுத்துறங்கிய பின், தனது உடம்பை தாவாணியால் மறைத்த நிலையில் தப்பியோடிய விசித்திரமான சம்பவம் ஒன்று இன்று (04) பதிவானது.
இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

இன்று அதிகாலை 3 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் 35 வயது மதிக்கத்தக்க திருடன் ஒருவன் முல்லை ஸ்கீம் கிராமத்திற்கு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, இரவு நேரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நடமாடும் பொலிஸ் வாகனம் ஒன்று அந்தப் பகுதியால் வருகை தந்ததை அவதானித்த குறித்த திருடன், முல்லை ஸ்கீம் கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

குறித்த திருடன் திடீரென புகுந்த வீட்டிற்குள் யாருமே இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு யாருமே இல்லாத வீட்டிற்குள் சமயலறை ஊடாக நுழைந்த குறித்த திருடன், அந்த வீட்டின் சமயலறையில் இருந்த குப்பி விளக்கொன்றினை ஏற்றி வெளிச்சத்தை வரவைத்துள்ளார்.

பின்னர், அந்த வீட்டில் இருந்த நுளம்பு வலையை எடுத்து தூங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அந்த வீட்டில் இருந்த துணிகளை எடுத்து தலையணைக்காகவும் பயன்படுத்தியுள்ளார்.

மேலும், பீடிகளை புகைத்துள்ள அந்த திருடன், ஐஸ் போதைப் பொருளும் பாவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் திருடன் தங்கியிருந்த வீட்டில் சத்தம் ஒன்று கேட்டபோது, யாமில்லாத வீட்டிலிருந்து சத்தம் வருவது எப்படி என்று நினைத்து அந்த வீட்டிற்கு பக்கத்திலுள்ளவர் அவதானித்துள்ளனர்.

எனினும் அங்கு நபர் ஒருவர் இருப்பதை கண்ட பக்கத்துவீட்டார் இதுபற்றி வீட்டின் உரிமையாளருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியுள்ளதுடன், ஏனையோருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், அந்த வீட்டிலிருந்த திருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தான் அணிந்து வந்த ஆடைகளை கழற்றி தங்கியிருந்த வீட்டின் சமயலறையில் வைத்துவிட்டு, அந்த வீட்டிலிருந்த பெண்கள் அணியும் தாவாணி ஒன்றை அணிந்த நிலையிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இவ்வாறு தாவாணி அணிந்த நிலையில் தப்பிச் செல்லும் காட்சிகள் அந்தக் கிராமத்தின் சில வீடுகளில் பொருத்தப்பட்ட சீ.சி.டி.வி கமராக்களில் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட முல்லை ஸ்கீம் இளைஞர்களும் ஊர்மக்களும் ஒன்று சேர்ந்து தப்பியோடிய குறித்த திருடனை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பெண்கள் அணியும் தாவாணியோடு தப்பியோடியதாக கூறப்படும் குறித்த திருடன், அந்த கிராமத்தின் பற்றைக்குள் பதுங்கியிருந்த நிலையில் ஊர் மக்களால் பிடக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த திருடன் பல திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என்றும், நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தளம் – பாலாவி அல்காசிமி சிட்டி கிராமத்தில் இவ்வாறு நூதனமான முறையில் அடிக்கடி பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அக்கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x