புதினங்களின் சங்கமம்

தமயந்தி மாடியிலிருந்து வீழ்ந்து இறந்ததாக கூறிய கணவன் சிறைக்குள் அடைக்கப்பட்டது ஏன்?

அம்பாந்தோட்டை – சூரியவெவ நகரில் அமைந்துள்ள கடையொன்றின் மேல் மாடி படிக்கட்டில் தவறி விழுந்து இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, அவரது கணவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.இந்த நிலையில் அவரை விளக்கமிறயலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி ஓஷத மிகார மஹராச்சி நேற்று முன்தினம் மாலை உத்தரவிடப்பட்டுள்ளார்.மருந்தகம் ஒன்றின் உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தை நலிந்த பிரசாத் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாயான ரசிகா தமயந்தி என்பவர் என பொலிஸார் சுட்டிக்காட்டியள்ளனர்.கடந்த முதலாம் திகதி அதிகாலை 04 மணியளவில் வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறி கணவரால் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.சந்தேகநபருக்கும், உயிரிழந்த பெண்ணுக்கும் இடையில் சண்டைகள் இடம்பெற்று வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சில காலமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இறப்பதற்கு முந்தைய நாள் இரவு இருவருக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நடந்துள்ளது.அதனடிப்படையில், இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்தவரின் தாயார் கங்கணம் கமகே பிரேமாவதி மற்றும் அவரது சகோதரி லியனகமகே ரமணி ஆகியோரினால் சூரியவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அதற்கமைய கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சூரியவெவ பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x