புதினங்களின் சங்கமம்

யாழில் பரபரப்பு ; பூட்டிய வீட்டினுள் இளைஞனின் சடலம்!!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் நெடுந்தீவு மேற்குப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குணாராசா தனுஷன் என்பவர் இனங்காணப்பட்டுள்ளார்.பூட்டிய வீட்டினுள் படுக்கையில் கிடந்த சடலம்அவரது உறவினர் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஆட்களற்ற வீட்டினை குறித்த இளைஞரே பராமரித்து வருவதாகவும், பகல்வேளைகளில் அவ்வீட்டில் படுத்து உறங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை (30) அவரை காணவில்லை என வீட்டார் தேடிச்சென்றவேளை பூட்டிய வீட்டினுள் படுக்கையிலேயே இறந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பிரதேச பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.