புதினங்களின் சங்கமம்

யாழில் மின்சாரம் தாக்கி உசாந்தன் பலி!!

யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை பகுதியில் மின்குமிழைப் பொருத்தும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.சம்பவத்தில்  24 வயதுடைய உ.உசாந்தன் என்பவரே உயிரிழந்தவராவார்.தனது வீட்டில் வைத்து, சுண்டல் வண்டிக்கு  மின்குமிழைப் பொருத்தும் போதே அவர் மின்தாக்குதலுக்கு உள்ளானதாக  முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அவர் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டார்.