புதினங்களின் சங்கமம்

யாழில் வெள்ளை வானில் வந்து அரச ஊழியரை அச்சுறுத்தியவர்களால் பரபரப்பு!! பொலிசில் முறைப்பாடு!!

யாழ்ப்பாணம் வடமாராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளை வானில் சென்ற சிலரால் அங்குள்ள வீடொன்றில் புகுந்து அவர்களை அச்சுறுத்தி வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் பணம் என்பன எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று இரவு 9:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
KDH ரக ஹயஸ் வாகனத்தில் சென்றிருந்தவர்களால் பருத்தித்துறை பிரதேச சபையில் பணியாற்றிவரும் உத்தியோகத்தரின் வீட்டுக்குள் சென்று உங்களுடைய அடையாள ஆவணங்களை காண்பியுங்கள் என்று தெரிவித்து அவற்றை பார்வையிட்டதுடன் அவர்களது தொலைபேசிகளும் பறிக்கப்பட்டுள்ளது.அதேவேளை குறித்த வீட்டின் குடும்பஸ்தர் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக வைத்திருந்த ஆவணங்கள், சோதிக்கப்பட்டுள்ளதுடன் அந்த பையில் இருந்த 5 லட்சம் ரூபாய் பணம், மற்றும் ஆறரை பவுன் தங்க நகைகளும் குறித்த நபர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.