புதினங்களின் சங்கமம்

உலகவங்கியின் குழு யாழ் வைத்தியசாலைகளுக்கு விஜயம்!!

இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்றைய தினம்திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது.அதன் போது , உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு உலக வங்கி குழு விஜயம் செய்து பார்வையிட்டது.உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட் தலைமையிலான குழுவினரே விஜயம் செய்தனர்.

அவருடன் , உலக வங்கியின் உயர் மட்ட குழு, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் குறித்த விஜயத்தின் போது கலந்துகொண்டனர்.