புதினங்களின் சங்கமம்

யாழ் சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் கோவில் தீர்த்த கேணியில் சிவப்பு நாகம்!! வீடியோ

நேற்று முன்தினம் தினம் (21) சீரணி நாகபூஷணி அம்பாள் தீர்த்தமாடும் தீர்த்தக்கேணியில் நாகம் ஒன்று கேணியில் தீர்த்தமாடியபடி காட்சி தந்தது. அடியவர்கள் பலர் அந்த காட்சியை கண்டு பரவசமடைந்தனர். நீண்டகாலமாக (12 வருடங்களுக்கு மேலாக) நீதிமன்ற வழக்கு நடைபெற்று அண்மையில் தர்மகர்த்தா சபையிடம் கோவிலின் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் காத்திரமான தீர்ப்பினை வழங்கியுள்ள நிலையில் நாகபூஷணி அம்பாள் தங்களுக்கு காட்சி தந்து நான் உங்களோடு தான் இருக்கிறேன் என்று கூறியிருப்பதாக அப்பகுதி மக்கள் மெய்சிலிர்த்து கூறுகின்றனர். குறித்த நாகம் செந் நிறத்தில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள்.