புதினங்களின் சங்கமம்

இலங்கையில் இன்று நடந்த கோர விபத்து… 28 பேரின் கதி…!!

இன்று காலை யட்டியந்தோட்டை ஜயவிந்தாகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் கரவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பெலம்பிட்டியிலிருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.