யாழில் அறுவைச் சிககிச்சை மூலம் குழந்தை பெற்ற இளம் பெண் திடீர் மரணம்!! காரணம் என்ன?
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட இளம் தாயாரொருவர் ஏழு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். மீசாலை மேற்குப் பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் லோஜிகா(வயது- 35) என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேற்படி பெண்மணி கடந்த ஒரு வார காலத்திற்கு முன்னதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளார்.
இந்நிலையில் மூன்று தினங்களுக்குப் பின் வீடு திரும்பிய அவருக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
இதன் காரணமாக மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை(25) மேற்படி பெண்மணி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் உயிரிழப்புத் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு சாவகச்சேரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். குறித்த அறிக்கையில் கிருமித் தொற்றால் மேற்படி பெண் இறந்திருக்கலாமெனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
{எஸ். ரவி-}

