புதினங்களின் சங்கமம்

யாழ் பருத்தித்துறை பிரதேசசெயலகத்தில் நடந்த சம்பவம் இது!!

Lingotpavanathar Sivashanker எனும் பெயருள்ள சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….

இண்டைக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு கடவுச்சீட்டு புதுப்பிக்க கையடையாளம் வைக்க Thakshan Vel உடன் சென்றிருந்தேன், வரவேற்புப்பகுதியில் விசாரிக்க, போகவேண்டிய இடத்தை தெளிவாகச்சொன்னார்கள், வளைந்து திரும்பி கைநாட்டு வைக்கவேண்டிய இடத்தை அடைய அங்கிருந்த இரு பெண்கள் விபரம் கேட்டு “மின்சாரம் தடைப்பட்டு விட்டது 5 நிமிடம் இருங்கள் அண்ணா” என்றனர், இருந்த போது ஒரு 21 வயது ஆண் தான் துணுக்காயிலிருந்து வவுனியா போய் வருவருவதாயும் மேசன் வேலை செய்வதாயும் சொல்ல, “ஏன் தம்பி இவ்வளவு அலைச்சல் நீ இதுக்கு கொழும்புக்கு போயிருக்கலாமே, பாவம் சாப்பிட்டியா நீ?” என்று அக்கறையோடு விசாரித்து, அவனை இருக்கச்சொல்லி தாங்களே அவனுடைய கைபேசியில் OTP இலக்கம் எடுத்து ஆவன செய்தனர், இதுற்கிடையே மின்சாரம் வர என்னுடைய ஆவணங்களை சரிபார்த்து, படம் எடுத்து, கை விரல் அடையாளங்களை பெற்று, கையெழுத்து வைக்க வேண்டிய இடங்களில் வாங்கி, இத்தனை நாட்களில் வரும் என்ற தகவலையும் சொல்லி 5 நிமிடங்களுக்குள் முடித்து அனுப்பினார்கள், சந்தோசமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது அவர்கள் தாங்கள் செய்வது வேலை என்பதை தாண்டி சேவை என்ற உணர்வும் தெளிவும் இருப்பதை தெரிந்த போது.