புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் குளத்தில் ரிக்டொக் வீடியோ எடுக்க சென்ற இருவர் பலி!! 4 பேர் மீட்பு!! வீடியோ

மட்டக்களப்பு நாவலடி குளத்தில் இன்று (08) காலை இளைஞர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.விபத்து ஏற்பட்ட போது படகில் ஆறு இளைஞர்கள் பயணித்துள்ளனர், அவர்களில் நால்வர் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.19 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.இவர்கள் குடிபோதையில் படகில் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.