யாழ் சாவகச்சேரியில் ஜோதீஸ்வரன் விபத்தில் பலியானதற்கு நிறை வெறியும் நண்பர்களுமே காரணம்!! நடந்தது என்ன?
சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் ஏ9 வீதியில் நேற்று (1) இரவு வீதி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளும், பிக்கப் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களில் பயணித்தவர்களும் சம்பவத்துக்கு சற்று முன்னதாக ஒன்றாக இருந்து மது அருந்தியவர்களே.
மது விருந்தில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்தே, இந்த துரதிஸ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.
நேற்று இரவு அமர்தகழி பிள்ளையார் கோயிலுக்கு அருகில் விபத்து நிகழ்ந்தது.
பளை தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த பரமனாதன் ஜோதீஸ்வரன் (41) என்பவரு உயிரிழந்தார். அவர் நுணாவிலில் விடுதியொன்றை நடத்தி வந்துள்ளார்.
சாவகச்சேரியிலுள்ள விடுதியொன்றில் நேற்று இரவு நண்பர்கள் குழுவொன்று மது அருந்திக் கொண்டிருந்துள்ளது. இதன்போது, மதுபோதையின் உச்சத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறை கட்டுப்படுத்த முடியாத நிலையில், விடுதி உரிமையாளர் சாவகச்சேரி பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்ற சாவகச்சேரி பொலிசார், தகராற்றில் ஈடுபட்டதுடன், பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த இளைஞன் ஒருவரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
இதையடுத்து, அந்த மது விருந்தில் கலந்து கொண்டிருநு்த ஜோதீஸ்வரன் பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்ட தமது நண்பன விடுவிக்க முயற்சிப்பதற்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையம் சென்றார்.
அவர் அங்கு சென்றபோது, பொலிசாரால் அழைத்து வரப்பட்ட இளைஞன் மது அருந்தியுள்ளாரா என்பதை பரிசோதிப்பதற்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
உடனடியாக வைத்தியசாலை நோக்கி விரைந்து சென்றுள்ளார்,
இதற்குள், அந்த மது விருந்தில் கலந்து கொண்டிருந்த மற்றொரு நண்பர் விடுதி உரிமையாளருடன் சமரசம் பேசி, முறைப்பாட்டை மீளப்பெற கோரியுள்ளார். இதற்கு விடுதி உரிமையாளர் சம்மதித்ததையடுத்து,உரிமையாளரை தனது பிக்கப் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சாவகச்சேரி பொலிஸ்நிலையம் நோக்கி சென்றார்.
இந்த சமயத்திலேயே பிக்கப் வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற ஜோதீஸ்வரன் உயிரிழந்தார்.
விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களையும் செலுத்தியவர்கள் மதுபோதையிலேயே வாகனத்தை செலுத்தியுள்ளனர்.
விபத்தையடுத்து, பிக்கப் வாகனத்தில் பயணித்த இருவரும், வாகனத்திலிருந்து கீழே இறங்கி ஓடித்தப்பிவிட்டனர். அவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

