புதினங்களின் சங்கமம்

இந்தியாவிலிருந்து கடத்திவந்த 227 கிலோ கஞ்சா – பொன்னாலையில் மடக்கிப்பிடித்த இளைஞர்கள்!!(Photos)

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு, பொன்னாலையூடாக எடுத்துச் செல்ல முயன்ற 227 கிலோ கஞ்சாவை நேற்றிரவு இரவு 9.45 மணியளவில் கிராம இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கஞ்சா கடத்தியவர்களில் ஒருவர் பிடிபட, ஏனையவர்கள் தப்பியோடியுள்ளனர்.

பிடிபட்டவர் பண்டாரவளையைச் சேர்ந்தவர் எனவும், பண்டத்தரிப்பு – மாதகல் பிரதேசத்தில் திருமணம் முடித்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொன்னாலை பரவைக்கடலினூடாகக் கடத்திவரப்பட்ட கஞ்சா, பொன்னாலைச் சந்திக்கும் வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கும் இடையில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றப்பட்டபோது இளைஞர்களிடம் சிக்கியுள்ளது.

குறித்த வாகனத்தின் செயற்பாட்டில் சந்தேகமடைந்த இளைஞர்கள், அதைச் சோதனையிட முற்பட்டபோதே கஞ்சா கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசாரிடம் வாகனத்துடன் கஞ்சா ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்ட நபரும் கையளிக்கப்பட்டுள்ளார்.

May be an image of 3 peopleMay be an image of textMay be an image of van and textMay be an image of 2 people and slow lorisMay be an image of 1 person and crowd