புதினங்களின் சங்கமம்

வர்த்தகருடன் கள்ளத் தொடர்பு!! வெளிநாட்டிலிருந்து வந்து மனைவியை குத்தி கொலை செய்த கணவன்!

மனைவி திருமணத்திற்கு புறம்பான தொடர்பு வைத்திருந்த காரணத்தால் கோபமடைந்த கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரலுவாவ பாபர்வத்தையில் வசித்து வந்த அமலி தினுஷிகா என்ற 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இன்று (02) காலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.சந்தேகத்திற்குரிய கணவர் மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரிந்து சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாகவும் அவர் வெளிநாட்டில் இருந்த போது மனைவி வர்த்தகர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த திருமணத்திற்கு புறம்பான உறவு குறித்து கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இன்று காலை இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். வீட்டில் காய்கறிகளை வெட்டப் பயன்படுத்திய சிறிய கத்தியால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.தாக்குதலுக்கு இலக்கான பெண் பலத்த காயங்களுடன் வீட்டினுள் வீழ்ந்த போது கணவனும், களளக்காதலனும் இணைந்து அவரை சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவ்வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் கணவரை குருநாகல் போதனா வைத்தியசாலையின் பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.மேலதிக விசாரணைகளுக்காக அவர் வெல்லவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.