புதினங்களின் சங்கமம்

மன்னாரில் ஐஸ் போதைப் பொருள் விற்ற அம்புலன்ஸ் சாரதி!! பொலிசாரை கையை கடித்து விட்டு ஓடித் தப்பினான்….

ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நோயாளர் காவுவண்டி சாரதி ஒருவரை கைது செய்ய சென்ற மன்னார் பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கையை கடுமையாக கடித்து விட்டு, அவர் தப்பி ஓடியதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் முருங்கன் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் 178 கிராம் 750 மில்லி ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நோயாளர் காவுவண்டி சாரதி சாரதியை கைது செய்ய முற்பட்ட போது அவர் கடித்து விட்டு தப்பிச் சென்றதாகவும் மன்னார் பொலிசார் தெரிவித்தனர்.