யாழில் தன்னிலை மறந்து திரியும் இவர் யார்?
இவரைத் தெரிந்தவர்கள்
தொடர்புகொள்க
சித்த சுவாதீனமுற்ற இந்த நபர் கட்டுவன் மேற்கு முனியப்பர் கோயிலுக்கு முன்பாக இன்று பிற்பகல் முதல் இருந்ததை அவதானித்த மக்கள் கிராம சேவையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
குறித்த நபர் உரிய விபரங்களை தெரிவிக்காத காரணத்தாலும் மருத்துவ சேவை தேவையாக இருந்தமையாலும் கிராம சேவையாளரால் தற்போது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவரது உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு கிராம சேவையாளர் திரு.பாலேந்திரா கேட்டுக்கொண்டுள்ளார்.

