புதினங்களின் சங்கமம்

ஓடும் போது சில்லு தனியாக கழன்று சென்றது!! சாதுாரியமாக பயணிகளைக் காப்பாற்றிய சாரதி!! ஹட்டனில் சம்பவம்!!

மலையகம் டயகம- கொழும்பு பேருந்தில் சில்லு கழன்று தனியாகச் சென்றது.சாரதியின் சாதுரியத்தால் பயணிகள் சேதமின்றி காக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை 06.10 மணியளவிற்கு புறப்பட்ட பேருந்தானது டயகமவிலிருந்து தலவாக்கலை, ஹட்டன் ஊடாக கொழும்பு நோக்கி செல்ல இருந்தது. ஆனால் எதிர்ப்பாராத விதமாக சில்லு (tyer) அகன்று பள்ளத்தில் விழுந்தது. எனினும் கடவுள் துணையால் அனைவரும் உயிர் தப்பினர். இதில் அதிகமாக பாடசாலை மாணவர்களே ஏறிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.பெருமளவு பாடசாலை மாணவர்கள் பயணித்த இப்பேரூந்தை சாதுரியமான முறையில் இயக்கி பல உயிர்களை காப்பாற்றிய சாரதியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.