புதினங்களின் சங்கமம்

யாழ் வந்த பிரபல இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் ஜனனியுடன் யாழ் கோட்டைக்குள் புகுந்து…!! வீடியோ

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான  சந்தோஸ் நாராயணன் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ளார். யாழ் வருகை தந்த சந்தோஸ் நாராயணனை ஈழத்தின் புகழ் பெற்ற  நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.யாழ்.கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வை தொடர்ந்து,  மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஸ் நாராயணன் மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.அதேவேளை சந்தோஸ் நாராயணன் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் பெரியளவிலான இசை நிகழ்ச்சியை நடாத்த திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வந்து சில மணி நேரத்திற்குள் திலீபனின் நினைவிடத்துக்கு சென்று வணங்கியதை தெரிவிக்காது ஜனனியுடன் கோட்டைக்குள் புகுந்ததை தெரிவிக்கிறாங்களே…….. என்று சந்தோஸ் நினைக்கலாம்……மீடியா வம்புத்தனம் என்பது இதுதான்….

குறிப்பு –   யாழ்ப்பாண வெயிலுக்கு ஜனனி கறுத்துப் போனது போல் தெரிகின்றது. அதனாலேயே அவரை பேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படத்தில் மறைத்து வெளியிட்டிருந்தோம்…. நாவூறு பட்டது போல் இருப்பதால் அந்த புகைப்படத்தை இங்கு அப்படியே தந்துள்ளோம்….

May be an image of 2 people

யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் விளையாடி மகிழ்ந்த சந்தோஸ் நாராயணன்

May be an image of 3 people