புதினங்களின் சங்கமம்

நல்லுார் கந்தசாமியாலும் இனி ஆட்டோக்காரர்களை காப்பாற்ற முடியாது? நடப்பது என்ன?

சமூகவலைத்தளத்தில் வந்த தகவலை அப்படியே இங்கு தந்துள்ளோம்……
யாழ். ஆட்டோ ஓட்டுனர்கள் உசாராகவேண்டிய நேரம்.
யாழ்ப்பாணத்தில் pick me செயலிக்கு ஏற்பட்டுவரும் வரவேற்பு உங்கள் அடிவயிற்றில் கைவைக்கப்போகிறது. மனச்சாட்சியின்றி நீங்கள் கேட்கும் கூலியே உங்களுக்கு உலைவைக்கிறது. Pick me போன்ற செயலிகளை மக்கள் பயன்படுத்த முனைந்து உங்களுக்கான கேள்வி குறையும்போது வேறு வழியின்றி நீங்களும் அதே செயலியை பாவிக்கவேண்டிய நிலை ஏற்படும். இன்று நீங்கள் 1500 ரூபாய் கேட்கும் 6km சவாரிக்கு pick me மூலமான வண்டிகளின் சவாரிக்கட்டணம் 600 ரூபா எனின் அதில் கமிசனாக 20% ஆன 120 ரூபாயை pick me புடுங்கிக்கொள்ளும். உங்கள் பேராசையால் ஒருநாள் அதே சவாரிக்கு 480ரூபாய் மட்டுமே உங்களுக்கு கிடைக்கப்போகிறது. உங்களைப் பயன்படுத்தி காப்பரேட்டுகள் தினம் தினம் பல லட்சங்கள் சம்பாதிக்கப்போகிறது. முடிந்தால் இப்போதாவது உசாராகுங்கள். வண்டிகளில் மீட்டர் பொருத்தி சவாரிகளுக்கு நியாயமான கூலியை வாங்கி உங்கள் வருமானத்தை தக்கவைத்துக்கொள்ளுங்கள். மீட்டர் பொருத்த வசதியில்லையெனின் பல இலவச மீட்டர் செயலிகள் இருக்கிறது. அவற்றையேனும் தொலைபேசிகளில் பயன்படுத்தி நியாயமாக நடந்துகொள்ளுங்கள். இல்லையேல் யாழ்ப்பாண ஆட்டோகாரரை நல்லூர் கந்தசாமியார்கூட கைவிட்டுவிடுவார்.
இல்லேன்னாலும் கிலோமீட்டர்க்கு மனசாட்சிபடி 80-100 வாங்கிக்கொள்ளுங்க. Gps map மூலமா இடங்களுக்கு இடையே தூரங்களை அறிந்து உங்களை நாடி வரும் வாடிக்கையாளரை நன்றாக நடத்துங்கள்.
May be an image of map and text that says "20h Teaching hospital to Commercial bank,Manipai branch போறதுக்கு ஆட்டோக்காரன் சொன்ன Rate 1500rupees only.. .PCKME la auto 572rupees...car கூட 1006 rupees.. Encourage PICKME in Jaffna Download the app at playstore http:/a/ole.ool com.pickme.passenger Navaly B230 Kondavil Uyarapulam Konda AB21 aitivu Fish Market AB18 Kokuvil East Kokuvil Sub Railway B305 Nallur Kandaswamy emple Pickup Dutch Fort in Jaffna 13, Clock Tower. AB20 'ay ”Jaffna Jaffn"