புதினங்களின் சங்கமம்

வெள்ளவத்தை pereira lane குறிஞ்சி அப்பார்ட்மென்டுக்கு அருகில் நடந்த கொடூரம்!! வீடியோ

சமூகவலைத்தளத்தில் ஒருவர் வெளியிட்ட வீடியோவுடன் கூடிய பதிவினை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்……

இன்று அதிகாலை அந்த பொண்ணோட அலறல் சத்தம் கேட்டுதான் நான் எழும்பினன் ,
சத்தம் கேட்டு வெளியே பார்த்த போது கண்ட காட்சி , பாதி video மட்டுமே எடுக்க முடிஞ்சது கத்தியால bag வெட்டி அடிச்சி் பறிச்சிட்டு போனாங்க . அந்த பையன் கைல வெட்டு காயம் , அந்த பொண்ணு ஆடை கிழிந்த நிலையில் .
இந்த மாதிரி சம்பவம் இங்க நடக்கிறது வாடிக்கதான்னு தெரியும் சுமார் 15 நிமிட போராட்டம் கண் எதிரே கைய காட்டி help பண்ணுங்க பண்ணுங்கனு கத்தும் போது கல்லு மாதிரி நிக்கிற மனுஷங்கள பார்த்து நினைத்து பயந்துதான் இந்த பகிர்வ போடுறன் , please வெளி ஊர்ள இருந்து வாரவங்க உங்களுக்கான பாதுகாப்பான போக்குவரத்த ஏற்படுத்தி வச்சிட்டு வாங்க , அதிகாலை வரும் பயணிகள நோக்கி ஒழுங்கைகள் வெளியே இப்படியான திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன , தயவு செய்து உங்களுக்கான பாதுகாப்ப ஏற்படுத்திட்டு வாங்க.
என்னால இந்த பதிவ பகிர மட்டுமே முடிஞ்சது என்கிற ஆதங்கத்தோட🙏🙏🙏
சம்பவ இடம் : pereira lane , குறிஞ்சி apartment ku முன் , வெள்ளவத்தை Colombo
15.09.2023 ம் திகதி 3.45am