லக்ஸ்மன் கதிர்காமர் கொலையில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி சிறைக்குள் மரணம்!!
லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 14 ஆண்டுகள் சிறையில் இருந்த
அரசியல் கைதி ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். கொழும்பு தெமட்டக்கொடையை
சேர்ந்த முத்தையா – சகாதேவன்( வயது -61 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர் கொழும்பில் வைத்து
சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை அடுத்து கடந்த 2005ம் ஆண்டு கொழும்பில் வைத்து சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.
அது தொடர்பில் வழக்கு விசாரணைகள் கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் ,
அவர் 14 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்த நிலையில்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு மரணமடைந்துள்ளார்