யாழில் வாள், கோடரியுடன் சென்ற காவாலியை சுற்றி வளைத்துப் பிடித்த பொலிசார்!!
யாழ் கட்டுடையில் நேற்று இரவு வாள் மற்றும் கோடரியுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் கட்டுடை பகுதிக்கு விரைந்த பொழுது வாள் மற்றும் கைக்கோடரியுடன் நடந்து சென்ற நபரையே பொலிசார் மடக்கி பிடித்துள்ளனர்.
குறித்த நபர் வன்முறை செயலுக்காக இவ்வாறு சென்றிருக்க கூடும் என பொலிசார் சந்தேகம் வெளயிட்டுள்ள நிலையில் குறித்த 29வயதான இளைஞருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

