புதினங்களின் சங்கமம்

இந்திய பிரதமர் விஜயம்: இன்று கொழும்பில் விசேட போக்குவரத்து ஒழுங்கு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு நகரிலும், அண்டிய பகுதிகளிலும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வகையில், இன்று (09) முற்பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், பிற்பகல் 1.45 முதல் 3.30 மணிவரையிலும் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேகபாதை உட்பட பாதைகள் பலவற்றில் வாகனப் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.