கொழும்பில் மோட்டார் சைக்கிள் கடை வைத்திருந்த 26 வயது தமிழ் இளைஞன் பிரதீப் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது ஏன்?
மாளிகாவத்தை செவன மாவத்தையில் இன்று (01) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இன்று திறக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்தில் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் மாளிகாவத்தை ஓய்வூதிய திணைக்களத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.தெமட்டகொட மிஹிந்து சென்புர பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய தினேஷ் பிரதீப் என்ற வர்த்தக நிறுவன உரிமையாளரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் நேற்று (1) காலை மோட்டார் சைக்கிள் சேவை நிலையமொன்றை ஆரம்பித்து, அந்த இடத்தில் முதலாவது மோட்டார் சைக்கிளை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.மாளிகாவத்தை பிரதேசத்தில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டில் தலைமறைவாகியுள்ள நெவிலின் நெருங்கிய சகாக்கள் இருவரும் சகோதரர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மாளிகாவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

