மாதகல் பொருளாதார உத்தியோகத்தர் திவாகரன் வயதானவர்களுக்கு செய்யும் அலங்கோலம்!!
யாழ் மாதகல் J/150 கிராமசேவகர் பிரிவினருக்கான பொருளாதார உத்தியோகத்தர் வயதானவர்கள் என்றும் பாராது அவர்களை சிரமதானம் செய்யுமாறு வற்புறுத்தியதாகத் தெரியவருகின்றது. உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுக்காக பெயர்ப்ட்டியல் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும்என்று வட்சப் ஊடாக மட்டும் அறிவித்திருந்தாராம் பிரதேச செயலக பொருளாதார உத்தியோகத்தர் திவாகரன். இவ்வாறான நிலையில் குறித்த வட்சப் குழு ஊடாக அறிவிக்கப்பட்ட தகவலை மற்ற அங்கத்தவர்களிடம் இருந்து அறிந்த தொலைபேசி இல்லாதவர்களும் முதியவர்களும் டோக்கனை வாங்குவதற்கு சென்றுள்ளார்கள். ஆனால் அங்கு சென்ற முதியவர்களையும் அவர்களின் வயதையும் பொருட்படுத்தாது சிரமதானம் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார் திவாகரன். அத்துடன் சிரமதானம் செய்ய இயலாமல் நின்ற வயோதிபர்களை டோக்கன் கொடுக்காது நாளைக்கு திரும்ப வா என அனுப்பினாராம். வட்சப்பில் காணப்பட்ட பட்டியல் இலக்கங்கத்தை குறித்து வருமாறு வயோதிபர்களிடம் திவாகரன் கூறியுள்ளார். தமக்கு வட்சப் தொடர்பு இல்லை என்று கூறி பட்டியல் இலக்கத்தை எமக்கு குறித்து தருவீர்களா என வயோதிபர்கள் திவாகரனை கேட்ட போது திவாகரன் அவர்களுக்கு அவற்றை குறித்துக் கொடுக்காது ஏசி அனுப்பியதாக குறித்த பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். அரசாங்க அதிபரின் கவனத்துக்கு…………


