கனடா ஆசையால் பறிபோன லட்சங்கள் -யாழ் நாவற்குழி வாசியின் தில்லாலங்கடி வேலை!
கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து 6 பேரிம் பணம் பெற்று ஏமாற்றிய குற்றச்சாட்டில் ஒருவர் வவுனியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிக்குளம், மல்லாவி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே ஏமாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், நாவற்குழியைச் சேர்ந்த ஒருவரே பணத்தை ஏமாற்றியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
ஒவ்வொருவரிடமும் இருந்து தலா 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவைப் பெற்றுள்ளார் என்றும், ஒருவரிடம் இருந்து 3 பவுண் சங்கிலி ஒன்றையும் பெற்றுள்ளார் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தைப் பெற்றுக்கொண்டவர் இழுத்தடித்ததை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் நாவற்குழியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
