புதினங்களின் சங்கமம்

கள்ள விசாவில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட இளைஞனுக்கு கட்டுநாயக்காவில் ஏற்பட்ட கதி!!

போலியான வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக பிரான்ஸ் செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று  வியாழக்கிழமை (10) குறித்த  இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் மற்றும் அவரது ஆவணங்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.