புதினங்களின் சங்கமம்

பைத்தியர் அருச்சுனாவை விட விசர்க் கூத்தாடும் ட்ரம்! இத்தாலிய பெண் பிரதமர் தன்னுடன் சேருவதற்கு ஆசைப்பட்டாராம்!!

யாழ்ப்பாணத்தில் விசர்க்கூத்தாடும் பைத்தியர் அருச்சுனாவை விட பல மடங்கு பைத்தியம் ஒன்று உலகையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தப் பைத்தியம் இத்தாலியப் பெண் பிரதமரைப் பற்றி கருத்துக் கூறி வெளியிட்ட புகைப்படத்தால் இரு நாடுகளுக்கும் இடையில் கடும் முறுகல் நிலை தோன்றியுள்ளது.

அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி குறித்து வெளியிட்ட கருத்து காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே தூதரக மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது, இத்தாலிய பிரதமர் தன்னுடன் புகைப்படம் எடுப்பதற்காக கெஞ்சியதாகவும், அந்தப் புகைப்படத்தை எடுத்ததில் அவர் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம் என்றும் டிரம்ப், இத்தாலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், டிரம்பின் இந்த அறிக்கை முற்றிலும் புனையப்பட்ட ஒரு பொய்யான கூற்று எனக் குறிப்பிட்டு தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, தானோ அல்லது இத்தாலியோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாரிடமும் கெஞ்சியதில்லை என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இத்தாலி குறித்து அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறான அவதூறான கருத்துக்களை வெளியிடுவது இது முதல் முறையல்ல என்றும், அவர் தனது நட்பு நாடுகளை இவ்வாறு நடத்துவது வருத்தமளிப்பதாகவும் இத்தாலிய பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தாஜானி அமெரிக்காவிற்கு மேற்கொள்ளவிருந்த தனது திட்டமிட்ட பயணத்தையும் ரத்து செய்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x