யாழில் சிங்கமாக மாறி பாய்ந்த பெண் விதானை!! வத்திராயனில் நடந்தது என்ன? (புகைப்படங்கள்)
G.S மார் என்றாலே மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் உண்டு
கள்ள மண்ணுக்கு ஆதரவு,
பக்கச்சார்பு,சட்டவிரோத நடவடிக்கைகளை தட்டிக்கேட்க தயங்குவது.
ஆனால் வத்திராயன் பெண் கிராம உத்தியோகத்தர் பொதுமக்களுக்கும் தன்சக கிராம அலுவலர்களுக்கும் சில செய்திகளை தன் செயற்பாட்டால் சொல்லிச் சென்றுள்ளார்.
வத்திராயன் கிராம அலுவலர் பொலிசுடன் சென்று கசிப்பு நிலையத்தை முற்றுகையிட்டுள்ளார்.
ஏனைய கிராம அலுவலர்களுக்கு தங்களுடைய கிராமத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தெரியாதென்று இல்லை ஆனால் வத்திராயன் பெண் கிராம அலுவலர் போன்ற துணிச்சல் உண்டா என்பதுதான் கேள்வி.
இந்த துணிச்சல்,இந்த பயம் இன்மை,தான்வாங்கும் சம்பளத்திற்கு தனது நேர்மையான கடமை எண்ணம்,இவருக்கு இருப்பது போல் ஏனைய கிராம அலுவலர்களுக்கும் இருந்தால் ஒவ்வொரு கிராமமும் வெகுவிரைவாக முன்னேறும்.





