புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் விஷமிகளால் வீட்டுக்கு தீ வைப்பு.!

வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாதோரால் இன்று அதிகாலை வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தனிமையில் வசித்து வந்த முதியவர் ஒருவரின் வீட்டுக்கே விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.இன்று (22.09.2025) அதிகாலை 2 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மதிலால் ஏறி மின்சாரத்தினை துண்டித்து வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தீ வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். தீயில் வீட்டின் முன்பகுதி எரிந்ததுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரிந்து நாசமாகியுள்ளது.

May be an image of motorcycle, scooter and textMay be an image of textNo photo description available.No photo description available.