புதினங்களின் சங்கமம்

புத்தளம் உடப்பு காளி அம்மனின் தங்கக் கண்களை பிய்த்து களவெடுத்த முன்னாள் புலி உறுப்பினருக்கு நடந்த கதி!

உடப்பு காளி கோவிலில் காளி சிலையில் இருந்த தங்கத்திலான கண்கள் இரண்டையும், அந்த சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளையும் திருடிக்கொண்டுச் சென்றிருந்த கும்ப்வூ கைது செய்யப்பட்டுள்ளார் என்று உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.தமிழீழ விடுதலைப்புலிகள் நாட்டில் செயற்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் அந்த அமைப்பின் உறுப்பினராக இந்த சந்தேகநபர் நெருக்கி செயற்பட்டுள்ளார்.

புலிகளின் நிர்வாக பிரதேசத்துக்குச் சென்று கும்ப்வூ கலையை பயின்றவர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேநபர், தேங்காய் பிடுங்கும் தொழில் செய்பவர் என்றும், அந்த கோவில் திருவிழாவின் போது, வேல் குத்தி, பறவைக்காவடி ஆடுபவர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

உடப்பு ஸ்ரீ விரபாத காளி அம்மன் ஆலயத்தினுள் பிரவேசித்த நபர் ஒருவரால் 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகள் மற்றும் உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

12 பவுனுக்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகளும், தங்கத்தால் செய்யப்பட்ட காளியின் இரண்டு நேத்திரங்களும் பக்தர்களால் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களவு தொடர்பாக வெளி வந்த முன்னைய செய்தி இது

மேலும், சந்தேக நபர் உண்டியலை உடைத்து அதிலிருந்த பெருந்தொகை பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இன்று (14) அதிகாலை காளி கோவிலின் ஒருபுறத்தில் உள்ள சிறிய வாயிலின் சாவியை உடைத்துக்கொண்டு முகத்தை மூடிய நபர் ஒருவர் கோவிலுக்குள் நுழைவது சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.

உடப்பு ஸ்ரீ வீரபத்திர காளி அம்மன் ஆலயம் உடப்பு கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ளதுடன் பழைய ஆலயம் முற்றாக புனரமைக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது.

உடப்பு காளி கோவிலுக்கு அதிகளவான மக்கள் தமது பிரச்சினைகளில் இருந்து தஞ்சம் புகுவதற்கு வழமையாக வந்து செல்வதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் உடப்பு வாசிகள் தற்போது கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கபடுகின்றது. இந்த திருட்டால் காளி கோவில் பக்தர்கள் கடும் பீதியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார், தடவியல் பொலிஸார் மற்றும் பொலிஸ் பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.