கிளிநொச்சியில் 20 வயது இளைஞன் நிதுர்சனன் பரிதாப மரணம்

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் ரக வாகனம் நேருக்கு
நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீீீதி முரசுமோட்டை பகுதியில் இந்த விபத்து
இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 11.45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த மோட்டார்
சைக்கிளை எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதித்தள்ளியுள்ளது.

இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தர்மபுரத்தை சேர்ந்த ஞானசேகரம் நிதுர்சனன்
(வயது-20) என்ற இளைஞன் உயிரிழந்தார்.

இதையடுத்து டிப்பர் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு
விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

error

Enjoy this blog? Please spread the word :)